புத்தூா் கட்டு -
எலும்பு முறிவுக்கான உடனடி மருத்துவம்
சில வருடங்ளுக்கு முன்பு
திருப்பத்தூாில் வாழும் மக்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் உடனடியாக ஆந்திர
மாநிலத்தில் உள்ள புத்தூா் என்ற கிராமத்து அழைத்துச் சென்று மருத்துவம்
பாா்பாா்கள். அவர்கள் எலும்பு
முறிந்த இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்று
கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு மூங்கில் தப்பைகளை வைத்து துணியினால் இறுகக்
கட்டி அதன் மீது அவர்கள் கொடுக்கும் அவர்களுடைய ஸ்பெஷல் எண்ணை ஒன்றை அடிக்கடி
ஊற்றச்சொல்வார்கள்.
வாரத்திற்கு ஒரு
முறை நோயாளியை வந்து போகச் சொல்லுவார்கள். கட்டுப்போட்ட இடம் மிகவும்
வீங்கியிருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு மறுகட்டு போடுவார்கள். எப்படிப்பட்ட
எலும்பு முறிவாக இருந்தாலும் இந்த வைத்தியத்தில் எலும்பு கூடிவிடும். பெரிய
காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறவேண்டும். பிறகுதான்
எலும்பைக் கவனிக்க முடியும். அதற்குள் எலும்பு எசகு பிசகாக ஒட்டிவிடும் வாய்ப்பு
உண்டு. அப்போது அந்த எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அப்படியே விட்டு
விடுவார்கள். இல்லையென்றால் அப்படி சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து, பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுவார்கள்.
எல்லாம் நாட்டு
வைத்தியம்தான். கோவையில் தெலுங்குபாளையம் உடையார் வைத்தியசாலை மிகப்பிரசித்தம்.
இங்கு சரியாகாத உடைந்த எலும்பு எங்கு போனாலும் சரியாகாது என்று சொல்வார்கள்.
இப்படி ஊர் ஊருக்கு ஒரு வைத்தியசாலை இருக்கும். சென்னைவாசிகள் புத்தூர்
வைத்தியத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்திருப்பார்கள்.
இந்த வைத்தியம்
மிகவும் எளிமையானது. ஏழைகளுக்கும் கட்டுப்படியாகக் கூடியது. என்ன, வீட்டில்
மற்றும் துணிமணிகளில் எண்ணை நாற்றம் போக ஓரிரு வருடங்கள் ஆகலாம். அவ்வளவுதான்.
இந்த மாதிரி வைத்தியங்கள் வெற்றிகரமாக
நடந்து கொண்டிருந்ததற்கு காரணம் எலும்புகளின் தன்மைதான்.
இன்று புத்தூா்
மருத்துவா்லே திருப்பத்தூரை நாடி வந்துவிட்டாா்கள்.
புத்தூா் கட்டு -
எலும்பு முறிவுக்கான உடனடி மருத்துவம்
சில வருடங்ளுக்கு முன்பு
திருப்பத்தூாில் வாழும் மக்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் உடனடியாக ஆந்திர
மாநிலத்தில் உள்ள புத்தூா் என்ற கிராமத்து அழைத்துச் சென்று மருத்துவம்
பாா்பாா்கள். அவர்கள் எலும்பு
முறிந்த இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்று
கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு மூங்கில் தப்பைகளை வைத்து துணியினால் இறுகக்
கட்டி அதன் மீது அவர்கள் கொடுக்கும் அவர்களுடைய ஸ்பெஷல் எண்ணை ஒன்றை அடிக்கடி
ஊற்றச்சொல்வார்கள்.
வாரத்திற்கு ஒரு முறை நோயாளியை வந்து போகச் சொல்லுவார்கள். கட்டுப்போட்ட இடம் மிகவும் வீங்கியிருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு மறுகட்டு போடுவார்கள். எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் இந்த வைத்தியத்தில் எலும்பு கூடிவிடும். பெரிய காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறவேண்டும். பிறகுதான் எலும்பைக் கவனிக்க முடியும். அதற்குள் எலும்பு எசகு பிசகாக ஒட்டிவிடும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். இல்லையென்றால் அப்படி சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து, பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுவார்கள்.
இன்று புத்தூா் மருத்துவா்லே திருப்பத்தூரை நாடி வந்துவிட்டாா்கள்.