scroll

திருப்பத்தூர் பற்றிய தமிழ்க்களஞ்சியம் வலைப்பூ உருவாக்கும் முயற்சி இனிதே தொடங்கி உள்ளது . உங்களை அன்போடு எனது வலைப்பூவைக் காண அழைக்கிறேன்.

புதன், 3 செப்டம்பர், 2014

திருப்பத்தூாில் சேவாட்டம்



       கூத்து ஒரு மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல,அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும்.
     ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வேறெந்த கொம்பு முளைத்த கலையிலக்கிய உற்பவனங்களும் தந்து விட முடியாது. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக்கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி      வருகிறார்கள்.

திருப்பத்தூாில் உள்ள தமிழா் கலை அடையாளம்.


சேவாட்டம்

     நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு ஆகும்.கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அவற்றின் தொன்மம் மாறாது பாரம்பர்யம் வழுவாது ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்கு  கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது.
 



வேலூரில் இருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூர் சென்று அங்கிருந்து ஜவ்வாதுமலை செல்லலாம். சந்தனம், பலா, கடுக்காய் போன்ற அரிய வகை மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மலையேற்ற பிரியர்களுக்கு ஏற்ற இடம்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=5773#sthash.TqpZ1Ehm.dpuf


     மேற்சொன்ன களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக
முனைப்புடன் செயல்பட்டு வரும் களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம், கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் முதலிய நிகழ்த்துக்கலைகளை பயிற்றுவிக்கும்படியான  பயிற்சிப்பள்ளியை சேலம் மாவட்டம் ஏர்வாடியில்  தொடங்கவிருக்கிறது. 



           
  அதற்கான ஆரம்பகட்டப்பணிகள் செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

வேலூரில் இருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூர் சென்று அங்கிருந்து ஜவ்வாதுமலை செல்லலாம். சந்தனம், பலா, கடுக்காய் போன்ற அரிய வகை மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. மலையேற்ற பிரியர்களுக்கு ஏற்ற இடம்.
- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=5773#sthash.TqpZ1Ehm.dpuf

1 கருத்து: