scroll

திருப்பத்தூர் பற்றிய தமிழ்க்களஞ்சியம் வலைப்பூ உருவாக்கும் முயற்சி இனிதே தொடங்கி உள்ளது . உங்களை அன்போடு எனது வலைப்பூவைக் காண அழைக்கிறேன்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

திருப்பத்தூாில் செயல்பட்டு வரும் மாற்று நாடக இயக்கம்


         திருப்பத்தூாில் கலை வளா்க்கும் தூய நெஞ்சக் கல்லூாி 
     நாடக வரலாற்றில் கல்விசார் நாடகங்கள் நவீன காலத்தின் புதுவரவு ஆகும். கூட்டுச் செயல்பாடு என்பதில் பங்கேற்பாளர்கள் பல்வேறு அனுபவங்களை பெறுவர். இதனால் அவர்களிடையே இணக்கமும் முரண்களும் பல்வேறு படிபினிகளைத் தருபவை. சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் முடிவெடுக்கவும் துணிந்து நிற்கவும் இவ்வனுபவங்கள் உதவிகரமாக இருக்கின்றன.


  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம் இத்தகைய பணிகளை முன்னெடுத்த நாடக அமைப்பாகும். 2003 ஆம் ஆண்டு இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
  மாற்று ரசனையைஉருவாக்குவதே இதன் இலக்கு என்ற அறிவிப்புடன் இவ்வமைப்புத் தோற்றம் பெற்றது. கடந்த பத்தாண்டுகளில் (2003-2012) எட்டு நாடகத் தயாரிப்புகளை மாற்று நாடக இயக்கம் செய்துள்ளது.

மாற்று நாடக இயக்கத்தின் தயாரிப்புகள்:

நாடக எழுத்தாளர்கள்
நாடகம்
பிரபஞ்சன்
முட்டை
எஸ்.எம்..ராம்
ஆபுத்திரனின் கதை
ஸீக் ஃபிரீட் லென்ஸ்
நிரபராதிகளின் காலம்
யூஜின் ஐனெஸ்கோ
பாடம்
சுஜாதா
கடவுள் வந்திருந்தார்
பெர்டோல்ட் பிரெக்ட்
தி காகேசியன் சாக் சர்க்கிள்
ஜே.பி.பிரீட்ஸ்லி
தி இன்ஸ்பெக்டர் கால்ஸ்
ஹபீப் தன்வீர்
சரண்தாஸ் சோர்
 
  இந்த நாடகங்கள் கல்லூரி வளாகத்திலேயே தொடர்ச்சியாக நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடகங்கள் மாணவர்களுக்காக இரண்டு காட்சிகளும் பொதுமக்களுக்காக ஒரு காட்சியுமாக நடத்தப்பெற்றுள்ளன. கல்லூரி வளாகத்திலேயே அதிகபட்சமாக ஆறு காட்சிகள் அரங்கேற்றப்பட்ட நாடகம், சரண்தாஸ் சோர் ஆகும்.



.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக