- வண்ணாம்பொதி
- வெந்திடுச்சா வெகலயா
- நாடு பிடித்தல்
- குச்சி தள்ளி
- மூலைக்கு மூலை
- முட்டை பூவா மலா்ந்த பூவா
- மெல்ல வந்து மெல்ல கொட்டு
- ஒத்தையா ரெட்டையா
- கொலை கொலையா முந்திாிகா
- மாது மாது மன்னவன் தம்பி
- எாிபந்து
- உப்பாணி
- கண்ணா மூச்சி
- ஆவியம் மணி காவியம்
- செதுக்கு முத்து
- செதுக்குத் தட்டு
- ஜோடி பிாித்தல்
- சிட்டு குருவி முட்டையிட்டா
- திருடன் போலீஸ்
- அக்கா அக்கா கிளி செத்துப் போச்சு
- நொண்டி
- கபடி
- கிச்சு கிச்சு தாம்புலம்
- பேணிப்பந்து
பல்லாங்குழி
பல்லாங்குழி என்பது, பொதுவாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.
தமிழர்களின்
பண்பாட்டு மரபினில் பெண்ணுக்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங்குழியும் ஒன்றாக இடம் பெறுகிறது.
அமைப்பு
பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். இரு வரிசையிலும் சேர்த்து பதினான்கு குழிகள் இருப்பதால் பதினான்கு குழி விளையாட்டு என்பதை பன்னாங்குழி என அழைத்தனர். பின்னர் பல்லாங்குழி என மருவியிருக்க வேண்டும். பொதுவாக புளியங்கொட்டையை
வைத்தோ அல்லது ஏதாவது பெரிய விதைகளையோ அல்லது சோளி (சோவி)களையோ ஆடுபொருளாக வைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.
விடுகதை
பல்லாங்குழி குறித்து சில விடுகதைகளும் உண்டு.
- ஏழும் ஏழும் பதினான்கு சோலைத் தச்சன் செய்த வேலை அது என்ன? எனும் விடுகதைக்கு பல்லாங்குழி விடை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக