ஏலகிரி மலை
ஏலகிரி என்னும்
மலைவாழிடம் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ளது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,410 மீ உயரத்தில் உள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்
ஏலகிரி மலை,
ஊட்டி மற்றும் கொடைக்கானல் போல் ஒரு
வளர்ச்சியுற்ற சுற்றுலாத் தலமாக இல்லாவிடினும், சாகச விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் மற்றும்
மலையேற்றம் போன்றவற்றை
மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும் உள்ளன
![]() ![]() |
சுற்றிப்பார்க்க
|
ஜவ்வாது மலை
ஜவ்வாது என்றால் மணம். ஜவ்வாதி என்றாலோ குணம்.
ஜவ்வாதி வணமக்கள் பழங்குடியினர்கள். இவர்கள் கூட்டம் கூட்டமாக ஜவ்வாது மலையில்
ஏறத்தாழ 229 மலைகிராமங்களில்
வசித்து வருகின்றனர்.
நடுவன், நாட்டான், ஊரான் ஆகியோர் முக்கிய பங்கை
வகிக்கின்றனர். அந்த மலைகிராம வளர்ச்சி மற்றும் ஊர் கட்டுகோப்பிற்கும் இவரே
பொறுப்பாவார்.
காவலூர் கிராமம்
ஜவ்வாது
மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். . இது தமிழ்நாட்டின் வாணியம்பாடி வட்டம், வேலூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தளம் ஆகும். இவ்வூரில் ஆசியாவின் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.
வைணு பாப்பு
வானாய்வகம் இந்திய வானியற்பியல் நிலையத்தின் அமைந்துள்ளது . இதனைஅப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர் வைணு பாப்பு அவர்களின் வானியல்
பங்களிப்புக்காக இப்பெயர்
சூட்டப்பட்டது. இங்குள்ள
2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி
ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். இது 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு
விடப்பட்டது.
ஜலகாம்பாறை
நீர்வீழ்ச்சி
(திருப்பத்தூர் இருந்து 14
கி.மீ. தொலைவில்)
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி ஏலகிரி மலையில் கிழக்கு சரிவு பகுதியில் காணப்படுகிறது மிகவும் அமைதியான இடம். நீர்வீழ்ச்சி அருகே லிங்கமும் (சிவன்) வடிவில்முருகக் கடவுள் உள்ளே ஒரு அற்புதமான காட்சி . நீர்வீழ்ச்சியை காண முக்கிய காலங்கள் செப்டம்பர் முதல் பிப்ரவரி ஆகும்.
.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக