நடுக்கல்
நடுக்கல்லா? நடுகல்லா?
ஆதி காலங்களில் போர்க்களத்தில் இறந்த வீரர்களைச் சிறப்பிக்கும் விதமாக ஊர் எல்லையில் அவர்களுக்கு நடுகல் வைக்கப்படும். அந்த நடுகல்லில் அவர்களது உருவம் செதுக்கப்பட்டிருக்கும்.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பல நடுகற்களை நாம் காண முடியும். இந்த நடுகல் என்பதை நடுக்கல் என்று எழுதுவது தவறு. நடுகல் என்று எழுதுவதே சரி.
ஏன் என்ற காரணத்தை இப்போது பார்க்கலாம். நடுகல் என்பது வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும், அதாவது,நடப்பட்டிருக்கும். நடப்பட்ட கல் என்பதால் தான் அது நடுகல் என்றழைக்கப்படுகிறது.
மாறாக, நடுக்கல் என்று எழுதினால் நடுவில் உள்ள கல் அல்லது நடுங்குதல் என்று பலவாறு பொருள் சொல்லலாமே அன்றி நடப்பட்ட கல் என்று பொருள் கொள்ள முடியாது. எனவே, இனி, நடுக்கல் என்று எழுதாமல் நடுகல் என்றே திருத்தமாக எழுதுவோம்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக