scroll

திருப்பத்தூர் பற்றிய தமிழ்க்களஞ்சியம் வலைப்பூ உருவாக்கும் முயற்சி இனிதே தொடங்கி உள்ளது . உங்களை அன்போடு எனது வலைப்பூவைக் காண அழைக்கிறேன்.

புதன், 3 செப்டம்பர், 2014

தமிழ்க்களஞ்சியம்

 தமிழ்க்களஞ்சியம் சின்னம்

  விளக்கம்

      "தமிழ்க்களஞ்சியம்" தமிழ் மொழியின் சிறப்புகளை ஒன்றாக சேமிக்கும் ஒரு புதிய முயற்சி. களஞ்சியம் என்ற சொல் பொதுவாக ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும்.

   இந்த தமிழ்க்களஞ்சிய வலைப்பூவும் தமிழின் முக்கிய சிறப்புகளை ஒன்றாக சேமிக்கும் ஒரு புதிய முயற்சி மற்றும் தமிழில் அழிந்து வரும் சில முக்கியமானவற்றையும் இங்கு நீங்கள் காணலாம்.
   

    தமிழ்க்களஞ்சியம் நம் அனைவராலும் பயன்படுத்தத் தக்க வலைப்பூ என்பதை  நான் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் தொரிவித்துக்கொள்கிறேன்.
    நம்மில் எத்தனை பேருக்கு நாம் வாழும் இடத்தின் வரலாறு தெரியும். அதன் வளமை, பெருமைகளை முழுதாக உணர்ந்திருக்கிறோமா? அல்லது அதன் பாரம்பரிய, ஆரோக்கியமான உணவை சுவைத்து இருக்கிறோமா? இல்லை! என்பதே நம்மில் பெரும்பாலோர் கூறும் பதில்கள்.  

    இந்த தேடல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளியாக இதோ யாம் உரையும் திருப்பத்தூரின் வரலாற்றுச்சிறப்புகள்.




  • திருப்பத்தூரின் அமைவிடம் மற்றும் பெயர்க்காரணம்
   திருப்பத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்பத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 87 வருவாய் கிராமங்கள் உள்ளன.

வரைபட வழிகள்:


நாட்றம்பள்ளி
வாணியம்பாடி,ஆம்பூர்
ஏலகிரி,ஆலங்காயம்

கிருஷ்ணகிரி
                          
<---- திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)  ---->


திருவண்ணாமலை
தர்மபுரி
சேலம்
சிங்காரபேட்டை





பெயா்க் காரணம்:
    ஆதியூா் தொடங்கி கோடியூா் வரை உள்ள இடைவெளியில் மொத்தம் பத்து திருக்கோவில்கள் உள்ளன எனவே தான் திரு+ பத்து+ ஊா்=திருப்பத்தூா்.



  • கலைகள்     
   மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று இதைச் சொல்லலாம். மலிந்து பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரம் கூத்து, பாவைக்கூத்து, கட்டபொம்மலாட்டம் இன்னும் பிறவுள்ள தொல்கலைகளை நிர்மூலமாக்கி வருவது கண்கூடு. இருப்பினும் நுண்கலைகளின்தாய்வடிவம் அவற்றில்தான் கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு.     
  
  கல்வி நிறுவனங்களின் கலைசார் நடவடிக்கைகளில் நாடகங்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றே வந்திருக்கின்றன. பெரும்பாலும் பள்ளி கல்லூரி ஆண்டுவிழாக்கள், முத்தமிழ் விழாக்கள் என்று நாடகங்கள் காலங்காலமாக அரங்கேறி வருகின்றன. எம் கல்லூரியிலும் மாற்று நாடக இயக்கம்” என்ற தலைப்பில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொனர்ந்துள்ளோம்.


  • மக்களின் தொழில்
     திருப்பத்தூர் வட்டம் பெரும்பாலும் மலைவாழ் மக்களை கொண்டது. அங்குள்ளவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மலையையும் அதில் இருந்து கிடைக்கும் பொருள்களையும் பயன்படுத்துகின்றனர்.
          அவற்றுள் முக்கியமானவை சில உங்கள் பார்வைக்காக,


நிலம் உழுதல்
  •   தேன் எடுத்தல்
  •   குச்சிக் கிழங்கு பயிரிடுதல்
  •   பழங்களை சேகரித்து விற்றல்
  •   சிறு தானியங்கள் பயிரிடுதல்
  •   பருத்தி சாகுபடி
  •   கூடை வேய்தல்
  •   பூ வியாபாரம்... இன்னும் பல



       விவசாயம் திருப்பத்தூர் மக்களின் முக்கியமான தொழிலாகும்.

  • பண்பாடுகள்

             மக்களின் பண்பாடுகள் அவர்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் திருவிழாக்கள் முதலியவற்றில் இருந்து அறியலாம். பொதுவாக பின்பற்றப்படும் பழக்கங்கள்



  • 6 மணிக்கு மேல் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது. 
  • இருட்டில் சாப்பிடக் கூடாது. 
  • விளக்கு வச்சதுக்கு பிறகு காசு கொடுக்கக் கூடாது. 
  • விட்டிற்கு வருபா்களுக்கு தண்ணீா் தருவது.



  • மொழிப்பற்று

     சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையைப் போலவே எம் ஊரிலும் “கம்பன் கலைக்கழகம்” தொன்றுதொட்டு செயல்பட்டு வருகிறது.


  • மருத்துவம்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” 

      ஒவ்வோருவரும் உடல்நலத்தைச் செம்மையாக பேணிப் பாதுகாப்பது இன்றியமையாததாகும். அதுவும் சுற்றுச்சூழல், உண்ணும் உணவு, பருகும் நீர் ஆகியவை பெருந் தொழிற்சாலைகளாலும் செயற்கை உரங்களாலும் மற்றும் வேண்டாத பழக்கங்களாலும் நோய்த்தாக்குதல் மலிந்து  வரும் இந்த காலகட்டத்தில் உடல் நலம் பேணுதல் மிகவும் சிக்கலான காரியமாகும்.
வியத்தகு எண்ணெய் மருத்துவம்

    அதற்க்கெல்லாம் தீர்வாக தும்மல கோட்டேஷ்வர ராவ் அவர்களின் “வியத்தகு எண்ணெய் மருத்துவம்” ஓர் எளிய முறை.


  • தமிழ்த் தடயங்கள்


     வீரத்தமிழன் நமக்காக விட்டுச் சென்ற சில தமிழ்த்தடயங்கள் பற்பல. அவற்றுள் சில வீர விளையாட்டுகள், பளு தூக்குதல் மற்றும் காளை அடக்குதல்.

  • தமிழ் வளர்க்கும் கல்லூரி

      தமிழ் வளர்க்கும் கல்லூரி தூய நெஞ்சக் கல்லூரி... மொழிக்கு முக்கியத்துவம் என்ற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட பகுப்பு “முத்தமிழ் விழா”

    



       























1 கருத்து:

  1. தமிழ்த் தடயங்கள் என்ற தலைப்பின் கீழ் உள்ள புகைப்படம் எங்கே எடுத்தது? அந்த நடுகல் உள்ள இடம் எது? நண்பரே நான் சு.சங்கரன் 2002-2005 தூயநெஞ்சக்கல்லூரி இயற்பியல் மாணவன். மாற்று நாடகக்குழு ஆரம்ப வருட நடிகன். என் கேள்விக்கு அளியுங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு